இந்தியா

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவருவது மாநில அரசின் பொறுப்பு – அமைச்சர் பியூஷ் கோயல்!

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவது மாநில அரசின் பொறுப்பு என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்

தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவுகிறது. தினதோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் சில மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என சில மாநில முதலமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதைப் பற்றி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியது; மாநில அரசுகள் தேவையான மருத்துவ ஆக்ஸிஜகளை வைத்திருக்கவேண்டும். ஆக்சிஜனை தேவைக்கு ஏற்ப கையாள்வது முக்கியமானது. அதனை விநியோகிப்பது மிக முக்கியமானது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவருவது மாநில அரசின் பொறுப்பு அதை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.