தடுப்பூசிக்கு பற்றாக்குறையில்லை; வந்தந்தி செய்திகளை நம்ப வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!
கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறையில்லை, வந்தந்தி செய்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவுகிறது. தினதோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அந்தக் கட்டுப்பாட்டில்; இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை முழு இரவு ஊரடங்கு எனவும் இரவு நேரத்தில் பொது போக்குவரத்து, வாகனங்கள், ஆட்டோ போன்றவை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், பால் வினியோகம் போன்றவை மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதைப் போல் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மருந்து பற்றாக்குறை இல்லை எனவும் வதந்தி செய்திகளை நம்பவேண்டாம் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவரின் பதிவில்; ஏப்ரல் 17 ஆம் தேதி நிலவரப்படி 55.85 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை (கோவிஷீல்ட் & கோவாக்சின்) மத்திய அரசிடமிருந்து பெற்றோம். நாங்கள் 47.05 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், தடுப்பூசிக்காக 8.8 லட்சம் டோஸ் அளவை சேமித்து வைத்திருக்கிறோம். இதனால் தடுப்பூசிகளின் பாதுகாப்பு பற்றியும் வதந்தி செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.