உலகம்

16 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து – அதிபர் ஜோ பைடன்!

16 வயது மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து போவதற்கு தகுதியானவர்கள் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரசால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை மூன்று கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பு ஊசி மருந்து போடுவதற்கு தகுதியானவர்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; நேற்றிரவு ரோல் அப் யுவர் ஸ்லீவ்ஸ் சிறப்புக்கு வந்ததற்கு நன்றி. இன்று அமெரிக்காவில் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற தகுதியுடையவர். இது இலவசம். இது பாதுகாப்பானது, இந்த தொற்றுநோயை நாம் எவ்வாறு முடிவுக்கு கொண்டு வரப்போகிறோம். உங்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.