சென்னையில் 18 சதவீதம் கொரோனா தொற்று அதிகமாக பரவுகிறது!
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதிலும் முக்கியமாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசும் பல நெறிமுறைகளையும், இரவு ஊரடங்கு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில்; தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை 9.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், சென்னையில் மட்டும் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தை காட்டிலும் சென்னையில் இரண்டு மடங்காக பரவி வருகிறது.
இதில் சென்னையில் 1,500 பேர் கோவிட் கேர் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 சதவீதம் பேர் தங்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் இரண்டு மடங்குகளாக கொரோனா பரவி வருகிறது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
2020 எடுக்கப்பட்ட நடவடிக்கை போல தற்போது பல நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அதிகமாக பரவாமல் தடுப்பது முக்கியம். வீட்டில் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அனைவருக்கும் பரவி வருகிறது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்துவது கூட ஆபத்தான விஷயம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்று முதல் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.