தமிழ்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனையில் தற்கொலை – இது தான் காரணமா!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் ரங்கன். இவர் கடந்த 16ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் 3 வது மாடியில் கொரோனா நோயாளி ரங்கன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கேளம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின் தகவலை அறிந்த காவல்துறை விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து ரங்கன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதன் பின்பு ரங்கன் தூக்கிட்டு தற்கொலை கொண்டதை வழக்கு பதிவு செய்து காவல் துறை விசாரணை மேற்கொண்டது. அதில் முதற்கட்ட விசாரணையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரங்கனை உறவினர்கள் யாரும் பார்க்க வர வில்லை என்பதாலும், மனைவி, மகன் ஆகியோரை பிரிந்து தனிமையில் இருந்தாலும் மன உளைச்சல் காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.