தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்தால்… ஸ்டாலினுக்கு நாடார்கள் வைக்கும் செக்!

தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றால் நாடார்களுக்கு நான்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அகில இந்தியா நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம் கார்த்திகேயன் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதை பற்றி அவரின் கடிதத்தில்; தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் நாடார்கள் பெரும்பாலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்துள்ளனர் அதைக் கருத்தில் கொண்டு தாங்கள் அமைக்க இருக்கும் புதிய அமைச்சரவையில் நாடார்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்

ஆனால், தங்கள் கட்சிக்கு வாக்களிக்காத இரு சமூகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக அமைச்சர் பதவி வழங்கி வருகிறார்கள் அம்பாசங்கர் அறிக்கையின் படி இரண்டாவது பெரிய சமூகமான நாடார்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது.

அதனை சரிசெய்யும் வகையில் இந்த முறை நாடார்களுக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மற்றும் விருதுநகர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு அமைச்சரை வழங்கி நாடார்கள் காண பிரதிநிதித்துவத்தை தாங்கள் வழங்க வேண்டும் என்பதை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என கடிதத்தில் எழுதியுள்ளார்.