இந்தியா

கொரோனா பரவல் காரணத்தினால் யு.ஜி.சி-நெட் தேர்தல் ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் காரணத்தினால் மே 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடக்க இருந்த யு.ஜி.சி-நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அறை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பரவலால் தற்போது மே 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடக்க இருந்த யு.ஜி.சி-நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை பற்றி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிவிட்டது; இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்த தேர்வு கொரோனா காரணத்தினால் மூன்றாவது முறை தேதியை அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், 15 நாட்களுக்கு முன்பே தேர்வின் தேதி அறிவிக்கப்படும் என மத்திய மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டுள்ளார்.