இந்தியா

18வயதிற்கு மேலானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ள 24ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு!

18வயதிற்கு மேலானோர் கொரோன தடுப்பூசி செலுத்த 24ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் முதல் கட்டமாக சுகாதாரத்துறை, முன்கள பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதன் பின்பு 45 வயது முதல் 60 வயது மேலானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் காரணத்தினால் 18 வயதிற்கு மேலான அனைவரும் வரும் மே 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்திக் கொள்ளலாம் அண்மையில் என மத்திய அரசு அறிவித்தது.

இதனால் வருகிற 24-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் தங்களின் பெயர்களை பதிவு செய்து 18 வயதுக்கு மேலானவர்கள் தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.