கொரோனாவை தடுப்பதற்கு இந்த மூன்று விஷியத்தை கண்டிப்பாக நம்புங்கள் – டாக்டர் பிரப்தீப் கவுர்!
கொரோனா வைரஸை தடுப்பதற்கு முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகிய மூன்று விஷியத்தையும் நம்புங்கள் என தேசியத் தொற்றுநோய் மைய அறிவியலாளர் மருத்துவர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முகக்கவசம், சமூக இடைவெளி மத்திய அரசும், மாநில அரசும் அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகிய மூன்று விஷியத்தையும் நம்புங்கள் என தேசியத் தொற்றுநோய் மைய அறிவியலாளர் மருத்துவர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார்.
இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; மக்கள் கொரோனா வைரஸை விட புத்திசாலி என்று நினைக்க வேண்டாம். கொரோனாவை வெல்ல பரிந்துரைத்த முறைகள் தோல்வியுற்றன- மந்தை நோய் எதிர்ப்பு சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் / பானங்கள் / பொடிகள், வெப்பம், சத்து மாவுகள் என அனைத்தும் கொரோனா முன்னிலையில் தோல்வியடைந்தது என தெரிவித்தார்.
மேலும், அறிவியல் முறையில் முகக் கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவையை நம்புங்கள் எனவும் மருத்துவர் பிரப்தீப் கவுர் பதிவிட்டுள்ளார்.