தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன் – டி.டி.வி. தினகரன் கண்டனம்!

தமிழக அரசின் நிர்வாகத்தை ஆலோசிக்காமல் வெளிமாநிலத்துக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவுக்கு என டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி பெருமளவில் தேவைப்படுகிறது. பல மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவால் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 45 ஆமெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா பிரதேஷ் மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கு அனுப்பிய தகவல் வெளியாகியது.

இந்நிலையில் மத்திய அரசின் செயலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவரின் பதிவில்; தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.

இத்தகைய செயலினை எந்தக் காரணத்திற்காகவும் ஏற்க முடியாது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

அதேபோல் கொரோனா தடுப்பூசியின் விலையை அவரவர் இஷ்டம்போல நிர்ணயிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.