இந்தியா

ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு காவல் பாதுகாப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

ஹரியானா மாநிலத்துக்கு ஏற்றி வந்த ஆக்சிஜன் லாரி ஓன்றை டெல்லி அரசு அபகரித்து விட்டதாகவும், இதனால் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க அரியானா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி பெருமளவில் தேவைப்படுகிறது. பல மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில், எங்கள் மாநிலத்துக்கு ஏற்றி வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் அடங்கிய லாரியை டெல்லி அரசு அபகரித்து விட்டதாக அரியானா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். டெல்லி வழியாக எங்கள் மாநிலத்துக்கு வந்து கொண்டிருந்த வாகனத்தை கொள்ளையடித்துள்ளனர் என குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் அனைத்து ஆக்சிஜன் டேங்கர் லாரிகளுக்கும் காவல்துறையின் பாதுகாப்புக்கு கொடுக்க உத்தரவுவிட்டதாக அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், எங்கள் மாநிலத்தில் தேவையான ஆக்சிஜனை பயன்படுத்திய பின்பு டெல்லி ஆக்சிஜன் அனுப்புவதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.