தேர்தல் வாக்குகள் எண்ணும் தினத்தில் தபால் வாக்குகள் எண்ண வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் மனு!
மே 2ஆம் தேதி தேர்தல் வாக்குகள் எண்ணும் தினத்தில் தபால் வாக்குகள் எண்ண வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியிடப்படயுள்ளது. இதனால் இவிஎம் இயந்திரங்களுக்கு பெரும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து தேர்தல் வாக்குகள் எண்ணும் தினத்தில் தபால் வாக்குகள் எண்ண வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மே 1ஆம் தேதியே தபால் வாக்குகளை பிரித்து வரிசைப்படுத்த இருப்பதாக சில மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் புகார் கொடுத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், மே 2ஆம் தேதி தேர்தல் வாக்குகள் எண்ணும் தினத்தில் தபால் வாக்குகள் எண்ண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.