கொரோனா பற்றி உயர்மட்ட குழுவுடன் நாளை ஆலோசனை – பிரதமர் மோடி!
கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் நாளை உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே நேற்று ஒரே நாளில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது பேசிய அவர்; கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு கடைசியாக இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டும் அப்படிச் செய்தால் ஊரடங்கு தேவையாக இருக்காது.
நம் நாட்டில் உள்ள மக்களும் அனைவரும் தடுப்பூசி மருந்து செலுத்தி கொள்ள வேண்டும். மருத்துவமனையில் தேவையான படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதை பற்றி அவரின் பதிவிட்டது, நாளை உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன். இதனால் நான் மேற்கு வங்காள மாநிலத்தில் செல்லவில்லை என பதிவிட்டுள்ளார்.