கொரோனாவுக்கான போரில் மாநிலங்களுக்கு மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு தரும் – பிரதமர் மோடி!
கொரோனா வைரஸுக்கான போரில் மாநிலங்களுக்கு மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு தரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் ஒரு கோடி 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினதோறும் மூன்று லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸால் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா , டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த மாநிலத்தின் அரசு கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவருவது பற்றி பிரதமர் மோடி இன்று அனைத்து மாநிலத்தின் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியது; அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்த தட்டுப்பாடும் இருக்காது. ஆக்சிஜனை தக்க நேரத்தில் கொண்டு செல்லவும், பயணத்தின் நேரத்தை குறைக்கவும் ரயில், விமான படைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துகளின், தடுப்பூசி ஆகியவற்றை மறைந்து வைப்பதை மாநில அரசுகள் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்துகள், தடுப்பூசி ஆகியவற்றின் தேவைகளை ஏற்று மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவை அனைத்தையும் அறிந்து செயல் படுத்தினால் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க முடியும்.
மேலும், கொரோனாவுக்கான போரில் அணைந்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு தரும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.