அரசியல்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்; தோல்வி பயத்தில் திமுக – எச்.ராஜா காட்டம்!

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தோல்வி பயத்தில் திமுக உளறுகிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

காரைக்குடியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; எந்த மாநிலத்திலும் இல்லாத விதமாக தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், விசிக மற்றும் கமல் ஆகிய கட்சிகள் வாக்கு இயந்திரத்தைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இந்த வாக்களிக்கும் இயந்திரத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது. இவர்கள் அனைவரும் பகுத்தறிவு உள்ளவர்கள் என்று தெரிவிக்கின்றனர். தேர்தல் கமிஷன் இவர்களை அழைத்து பேசிய சமயத்தில் எந்த விதமான பதிலும் தெரிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் வாக்கு பாதிப்பு இயந்திரத்தை மாற்றலாம் என தெரிவிக்கும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் எதிர்கட்சினர் உளறிவருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைக்க போவதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் 58 ஆயிரம் தடுப்பூசி வந்ததில் 46 ஆயிரம் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.