இந்தியா

மகாராஷ்டிரா தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 2 லட்சம் உதவி – பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளர்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அந்த பரவலால் பல மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல்கர் மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள் வேகமாக தீயை அனைத்தும் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினர். ஆனால், இந்த தீ விபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்கள் குணமடைய 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.