அரசியல்தமிழ்நாடு

மே 2ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கப்படும் – சத்யபிரதா சாகு உறுதி!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை எடுத்து வருகிறது.

இதனிடையே கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. அந்த தினம் ஞாயற்றுக்கிழமை என்பதால் ஊரடங்கு அமலில் இருக்கும் . இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா? இல்லை தள்ளி வைக்கப்படுமா? என்கிற கேள்விகள் பெரும் அளவில் எழுந்தது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி காலை 8 மணிக்கு துவங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி பேசியவர்; வாக்கு எண்ணும் மேஜைகள் பற்றி முடிவெடுக்கவில்லை. வாக்கு எண்ண இருக்கும் அறை சிறிய அளவில் இருந்தால் இரண்டு அறைகளில் எண்ணிக்கை நடைபெறும். ஒரு அறைக்கு 7 மேஜை என 14 மேஜைகளில் எண்ணிக்கை நடைபெறும்.

மேலும், 234 தொகுதிகளிலும் மே இரண்டாம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கப்படும் எனவும் 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணப்பட்டு 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.