உலகம்

ஜப்பானில் அதிகரிக்கும் கொரோனா; நான்கு மாகாணத்தில் கடும் கட்டுப்பாடு!

ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸின் நான்காவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் ஜப்பானில் இதுவரை 5 லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேலான குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜப்பானின் டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட 10 மாகாணத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சுகா; வருகின்ற 25 ஆம் தேதி முதல் மே 11ம் தேதி வரை முக்கியமாக நான்கு மாகாணத்தில் கடும் கட்டுப்பாடுகள், அவசர கால நிலையும் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ போன்ற மாகாணங்கள் இடம்பெற்றுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து, போன்ற விஷயங்கள் குறைந்த அளவே நடக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மருந்து அத்தியவசிய பொருட்கள் போன்றவற்றை தவிர பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பெரிய வணிக வளாகம், மதுபான கடைகள் போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது எனவும் பிரதமர் சுகா தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இதுவரை ஒரு சதவீத மக்களுக்குதான் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.