ஆக்சிஜன் வாங்க இந்தியாவுக்கு 50,000 டாலர் வழங்கிய பேட் கம்மின்ஸ் – குவியும் பாராட்டு!
இந்தியா ஆக்சிஜன் வாங்குவதற்கு “பிரதமர் கேர்ஸ்” நிதிக்கு நன்கொடையாக 50 ஆயிரம் டாலர்களை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அளித்துள்ளார் .
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பல மாநிலத்தில் மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழந்து வரும் வேகம் நடந்து விடுகிறது என பல நாடுகள் இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். இவர் இந்தியா ஆக்சிஜன் வாங்குவதற்கு “பிரதமர் கேர்ஸ்” நிதிக்கு நன்கொடையாக 50 ஆயிரம் டாலர்களை அளித்துள்ளார்.

இந்தியா ஆக்சிஜன் வாங்குவதற்காக அமெரிக்கா மதிப்பில் 50 ஆயிரம் டாலர்களை (இந்திய பண மதிப்பில் ரூ. 37,36,590.00) பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக அளித்து உள்ளார். மேலும், ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் சக வீரர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவி வரும் நிலையிலும் நாங்கள் கிரிக்கெட் விளையாடி வருகிறோம் என்று நினைக்கலாம். ஆனால், வீட்டில் இருக்கும் மக்களின் சந்தோசத்திற்காக கிரிக்கெட் விளையாடி வருகிறோம் என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். பேட் கம்மின்ஸின் உதவிக்கு இந்தியாவை சேர்ந்த பலரும் தங்களின் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.