அரசியல்

மேற்குவங்காளம் ஏழாவது கட்ட சட்டமன்ற தேர்தல்; 75.06 சதவீதம் வாக்கு பதிவு!

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று ஏழாவது கட்ட சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் ஏப்ரல் 29 தேதி எட்டாவது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இன்று ஏழாவது கட்ட சட்டமன்ற தேர்தல் மேற்குவங்காளத்தின் மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் அடங்கிய 36 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மீதி இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் உயிரிழந்ததால் அந்த தொகுதிகளுக்கு மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 34 தொகுதியில் வாக்கு பதிவு பற்றி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

காலை 9.30 மணி நிலவரப்படி 17.47 சதவிகிதமும், காலை 11.35 மணி நிலவரப்படி 37.72 சதவிகிதமும், மதியம் 1.30 மணி நிலவரப்படி 55.12 சதவிகிதமும், மாலை 5.31 மணி வரை 75.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.