அரசியல்இந்தியா

தேர்தல் வெற்றி கூட்டத்திற்கு தடை – தேர்தல் ஆணையம் அதிரடி!

வருகின்ற மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வெற்றி ஊர்வலத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்கு வங்காள மாநிலத்தில் மட்டும் இன்னும் ஒரு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநிலத்துக்கும் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை. இதனால் கொரோனா பரவல் வேகமாக பரவி உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்; வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரிவித்துக் கொண்டிருக்கும் போது கூட்டத்துக்கும், கொண்டாட்டத்திற்கும் தேர்தல் ஆணையம் தடை விதிக்கிறது.

மேலும், யாரும் தேவையின்றி கூட்டத்தை கூட்ட கூடாது. வெற்றி பெறுவோர்கள் கூட்டமாக வரக்கூடாது. இருவர் மட்டும் தான் வரவேண்டும். வெற்றி பெறுவோர்கள் மக்களை சந்திக்க கூடாது. தேர்தல் வெற்றி ஊர்வலத்திற்கும் மற்றும் கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.