உலகம்

மாஸ்க் அணியவில்லை; தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் – இதனை ஆயிரமா!

தடுப்பூசி பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ்க் அணியவில்லை என்பதால் தாய்லாந்து பிரதமருக்கு 14,270 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. இதுவரை தாய்லாந்து நாட்டில் கொரோனாவால் 57,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 148 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26 ஆயிரத்து மேலான குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

முக்கியமாக தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி மக்கள் மாஸ்க் அணிய வில்லை என்றால் 20 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் 46 ஆயிரத்து 610) ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பங்காக்கில் கொரோனா தடுப்பூசி பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா அணிய வில்லை என்பதால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் பிரதமருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தது. அவருக்கு பாங்காக நிறுவனம் 6 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 ஆயிரத்து 270) அபராதம் விதித்துள்ளது. மேலும், அவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.