தமிழ்நாடு

ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சைக்கு பயன்படுத்தலாம் – சத்குரு!

ஈஷாவித்யா பள்ளியின் வளாகங்களை கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க தமிழக அரசு பயன்படுத்தலாம் என சத்குரு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பல மாநிலத்தில் மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு, தனியார் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈஷாவித்யா பள்ளியின் வளாகங்களை கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க தமிழக அரசு பயன்படுத்தலாம் என சத்குரு தெரிவித்துள்ளார்.

இதை பற்றி வரின் பதிவில்; ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை வளாகங்களை கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.