18 வயது மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்த முன்பதிவு தொடக்கம்!
இந்தியா முழுவதும் 18 வயது மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தவதற்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் ஒரு கோடி 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார். இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனார். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல வழிகாட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இவைகள் இருந்தாலும் அனைவரும் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தி கொள்ள வேண்டும் என பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது 45 வயதுக்கு மேலானோர் மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேலானவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி இருந்து செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தி கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனாவை கட்டுபடுத்த முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 18 வயதிற்க்கு மேல் ஆனவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதற்கு இன்று நான்கு மணிக்கு முன்பு செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்யும் இணையதளம் தொடங்கியுள்ளது. பதிவு செய்ய https://www.cowin.gov.inஎன்கிற இணையதளத்துக்கு சென்று “ரிஜிஸ்டர் மை செல்ப்” என்பதை அழுத்தி பின்பு செல்போன் எண்னை பதிவு செய்து, வயது உள்பட விவரங்களையும், ஆதார் எண், அரசு அடையாள அட்டை பதிவு செய்து தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்.