தமிழ்நாடு

18 வயதிற்கு மேலான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் தமிழ்நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனார். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல வழிகாட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இவைகள் இருந்தாலும் அனைவரும் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தி கொள்ள வேண்டும் என பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மக்களும் முன்வந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வருகின்றனர். தற்போது மே 1ஆம் தேதி முதல் 18 வயது மேலானவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகவே முன்பதிவு செய்ய COWIN என்ற இணையதளம் இன்று மாலை 4மணி முதல் செய்யப்பட துங்கியது.

இந்நிலையில், 18 வயதிற்கு மேலான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியது; கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.