இந்தியா

அசாமில் சக்திவாய்ந்த பூகம்பம்; தேவையான உதவிகளை செய்ய ரெடி – பிரதமர் மோடி!

அசாம் மாநிலத்தில் இன்று காலை மிக சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூர் மாவட்டத்தில் இன்று காலை 7.50 மணியளவில் பயங்கரமான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் ரிக்டர் அளவு 6.4 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் வந்தனர்.

இந்த பூகம்பத்தால் மக்களுக்கும் மற்றும் அங்கு இருக்கும் பகுதிகளுக்கும் சேதம் ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் மேற்கு வங்காளம் மாநிலம் மற்றும் சில வட கிழக்கு மாநிலங்களிலும், பூடான் நாட்டிலும் பூகம்பம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தின் முதல் அமைச்சர் சர்பானந்தா சோனோவாலுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் மூலம் பேசியுள்ளார். அப்போது அசாம் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் மற்றும் மக்கள் நலமுடன் இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.