இந்தியா

கொரோனாவுக்கு எதிரான போரில் உதவும் பணிகள் பற்றி எம்.எம். நரவானே பிரதமர் மோடியுடன் ஆலோசனை!

கொரோனா வைரஸுக்கான போராட்டத்தில் மேற்கொள்ளும் உதவிப் பணிகள் குறித்து தலைமைத் தளபதி எம்.எம். நரவனே பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரசால் மூன்று லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பல மாநிலத்தில் மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு உதவ பல உலக நாடுகள் முன் வந்து உதவிகளை செய்து வருகிறது. மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசி போன்றவற்றை கொடுக்க தயாராக உள்ளது.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியை இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவானே இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது கொரோனா வைரஸுக்கான போராட்டத்தில் ராணுவம் மேற்கொள்ளும் உதவிப் பணிகள் குறித்தும், பல திட்டங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவாழ் பாதிக்கப்படும் மக்களுக்காக அனைத்து மருத்துவமனையும் ராணுவம் திறந்து வருகிறது. மக்கள் தங்களின் அருகில் உள்ள மருத்துவனைக்கு செல்லலாம் எனவும் வெளிநாட்டிலிருந்து வரும் ஆக்சிஜன், மருந்துகள் போன்றவற்றை கையாளுவதற்கும், உதவிக்கும் ராணுவம் ஈடுபட்டு வருகிறது என எம்.எம். நரவானே பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.