அரசியல்இந்தியா

தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கேரளா மாநிலத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதில் 140 தொகுதிகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையை வரும் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும்.

இந்த சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே பெரும் போட்டியே நிலவியது. இந்த சட்டமன்ற தேர்தலை ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியாக காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொண்டது.

கேரளா நிலாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வி. வி.பிரகாஷ் களம் இறங்கினர். இவர் மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். இதனிடையே இன்று காலை இவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் வி. வி.பிரகாஷ் காலமானார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், உறவினர்கள் ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.