கொரோனாவை சமாளிக்க நிதி உதவி வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்!
கொரோனா வைரஸை சமாளிப்பதற்கு இந்தியாவுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூபாய் 7.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரசால் மூன்று லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனிடையே பல மாநிலத்தில் மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு உதவ பல உலக நாடுகள் முன் வந்து உதவிகளை செய்து வருகிறது. மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசி போன்றவற்றை கொடுக்க தயாராக உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு இந்தியாவுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (ஒன் மில்லியன் டாலர்ஸ்) ரூபாய் 7.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்த நிதி உதவியை கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் என அனைவரும் இணைந்து வழங்கியுள்ளனர்.இதை ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட் ஒன்றிணைந்து இந்தியாவுக்காக வழங்கியுள்ளது.