அரசியல்

ஐந்து மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு – விறுவிறுப்பான தேர்தல் களம்!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார். இதனால் அவர் தெரிவித்தபடி ஐந்து மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், அசாம் மாநிலத்தில் மூன்று கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் எட்டு கட்டமாகவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி, சிஎன்எக்ஸ் போன்ற செய்தி நிறுவனங்கள் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற 234 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி 56 முதல் 68 தொகுதியும், திமுக கூட்டணி 160 முதல் 170 தொகுதியும், மற்றவை 6 தொகுதியும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நடைபெற்ற 140 தொகுதி சட்டமன்ற தேர்தலில் இடது சாரி கூட்டணி 72 முதல் 80 தொகுதியும், காங்கிரஸ் கூட்டணி 58 முதல் 64 தொகுதியும், பாஜக 5 தொகுதியும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நடைபெற்ற 30 தொகுதி சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 16 முதல் 20 தொகுதியும், காங்கிரஸ் கூட்டணி 11 முதல் 13 தொகுதியும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 126 தொகுதி சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக கூட்டணி 75 முதல் 85 தொகுதியும், காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 50 தொகுதிகள் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற 294 தொகுதி சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 138 முதல் 140 தொகுதியும், திரிணாமுல் காங்கிரஸ் 126 முதல் 136 தொகுதியும், காங்கிரஸ் கூட்டணி 10 முதல் 17 தொகுதியும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரியில் பாஜக கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இடது சரிகளும், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மே 2 ஆம் தேதி ஏதும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடியாது. ஆகவே பொறுத்து இருந்து பார்ப்போம்.