அரசியல்இந்தியா

தலைநகரின் பெயரை மாற்றினால் நாடு தப்பிக்கும்…சர்ச்சையை கிளப்பியது சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் பெயரை ‘இந்திரபிரஸ்தா’என மாற்றி அமைக்க வேண்டும் ,எனபாஜகவின் நாடாளுமன்ற எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

நம் நாட்டில் பற்பல புராணங்கள் உண்டு,அந்த புராணங்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள நகரங்களின் பெயர்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பது வலதுசாரி இந்துத்வா ஆதரவாளர்களின் கருத்தாகும். இந்த கருத்தை அடிப்படையாக கொண்டு உத்தரபிரதேசத்தின் அலகாபாத் நகரின் பெயரை ‘பிரக்யாராஜ்’என அம்மாநில அரசு மாற்றி அறிவித்திருந்தது.

இது போலவே தெலங்கானாவின் தலைநகரான ஐதராபாத்துக்கு ‘பாக்யா நகர்’என பெயர் சூட்ட வேண்டும் என்று வலதுசாரிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் சர்ச்சைக்கு பெயர் போன பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, டுவிட்டரில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதாவது நம் நாட்டின் தலைநகரான டெல்லியின் பெயரை ‘இந்திரபிரஸ்தா’என மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பெயருக்கு பொருத்தமான ஆதாரத்தையும் டெல்லி அறக்கட்டளையினர் வைத்திருப்பதாகவும், பெயரை மாற்றினால் நாடு மோசமான பிரச்சனைகளுக்கு ஆளாகாது, என தமிழக முனிவர் ஒருவர் தம்மிடம் கூறியதாக பதிவிட்டுள்ளார்.