சினிமா

திருமணம் முடிந்த கையோடு பிரச்சனையில் சிக்கிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்..! முழு விவரம் இதோ…

இந்திய திரையுககில் நீண்ட நாள் காதலர்களாகவும் நட்சத்திர ஜோடியாகவும் வலம் வந்த நடிகை நயன்தாராவிற்கும் , விக்னேஷ் சிவனுக்கும் நேற்று காலை நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் புடை சூழ கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், மணிரத்னம், சூர்யா, கார்த்தி ஜோதிகா என பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் திருமணம் முடித்த கையோடு இன்று நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காலையில் இருந்து தற்போது வரை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சாமி தரிசனம் செய்த பின்னர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரையும் போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்த, தனியார் புகைப்பட நிறுவனத்தின் ஆட்கள், திருப்பதி தேவஸ்தானத்திற்குள் செருப்புடன் சென்றுள்ளதாக தற்போது புதிய பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது.

அவர்களின் இந்த செயலால் நடிகை நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த செய்தி நயன்தாராவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியமட்டுமல்லாமல் இவர்களின் பிரமாண்ட திருமணத்தை பார்த்து யாரோ கண்ணுவைத்து விட்டார்கள் அதனால் தான் இப்படி நடக்கிறது என்று கூறி வருகின்றனர் .