சினிமா

வலிமை, பீஸ்ட் படங்களின் முழு வசூலை ஒரே வாரத்தில் ஈட்டிய உலகநாயகனின் விக்ரம் ..!

பல வருடங்களாக கமல்ஹாசனை திரையில் காணமுடியவில்லை என்ற ரசிகர்களின் ஏக்கத்தை முற்றிலும் போக்கும் வகையில் விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது.

உலகின் எந்த திசையில் திரும்பினாலும் விக்ரம் படத்தின் பேச்சு தான் உரக்க ஒலிக்கிறது . தமிழ் சினிமா திரையரங்க உரிமையாளர்களும் விக்ரம் வெற்றியால் செம்ம குஷியில் உள்ளனர்.

அந்த வகையில் தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்கள் , நாடுகள் என அனைத்து இடங்களிலும் விக்ரம் வெறித்தனமான வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் விக்ரம் ரூ 230 கோடிக்கும் மேல் ஒரே வாரத்தில் வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் தளபதியின் பீஸ்ட், அஜித்தின் வலிமை படங்களின் மொத்த வசூலையும் விக்ரம் பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்ரம் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்துள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.