திருவோணம் விரதத்தை மேற்கொள்ளும் முறை
திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும்.
காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்யவேண்டும்.மேலும் மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும். மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும்.
இந்த திருவோண விரதம் ஒருமுறை இருந்தால் கூட போதும் என பெரியோர் கூறுகின்றனர்.மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். மாலை வேளையில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து விரதத்தை முடித்து கொள்ளலாம்