சினிமா

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தர் நிலை என்ன..? சிம்பு தரப்பில் இருந்து வெளியான உண்மை தகவல்…

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர் என பல அவதாரம் எடுத்து அதில் சாதித்தவர் டி.ராஜேந்தர்.

அப்பாவுக்கு நான் என்றும் சலித்தவனல்ல என்று கூறும் வகையில் இவரின் மூத்த பிள்ளையான சிம்பு என்னும் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் சிறுவயதிலேயே நுழைந்து பல சாதனைகளை நிகழ்த்தியவர் . நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என இவருக்கும் பல திறமைகள் உண்டு .

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக டி.ராஜேந்தர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு உயர்தர சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதால் அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல இருப்பதாக நடிகர் சிம்பு ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தார் . அந்த வகையில் தற்போது சிம்பு மருத்துவ ஏற்பாடுகள் செய்ய வெளிநாடு சென்றுள்ள நிலையில் இன்று டி.ராஜேந்தர் அவர்களும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறாராம்.

அமெரிக்கா செல்லும் அவர் முழுமையாக குணமடைந்த பிறகே சென்னை திரும்புவார் எனவும் சிம்பு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது .