விளையாட்டு

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி..? இன்று 3வது டி20 போட்டி..

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் வெற்றியையே மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாடி வருகிறது.

உரிய பாதுகாப்புடன் கடந்த 9ம் தேதி தொடங்கிய போட்டி வருகிற 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட ஜாம்பவான்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து இளம் புயல் ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிஷ்ப் பந்த் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி சந்தித்த முதல் இரண்டு போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்துள்ளது . முதல் போட்டியில் பேட்டிங்கில் 211 ரன்கள் சேர்த்த போதும் பந்துவீச்சில் கோட்டை விட்டதால் தோல்வி அடைந்தது.

இதேபோல் இரண்டாவது போட்டியில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பியது. அந்த போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் பந்துவீச்சிலும் , இரண்டாவது போட்டியில் பேட்டிங்கிலும் இந்திய அணி படு மோசமான ஆட்டத்கை வெளிப்படுத்தியது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது . .

இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள YS ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் வெற்றி வெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது . இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக அமைந்துள்ளது.

இந்த பக்கம் முதல் இரண்டு போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .