தமிழக பா.ஜ.க கலை,கலாச்சார பிரிவு மாநில துணைத்தலைவராக ராஜேஷ்கண்ணா நியமனம்.
தமிழக பா.ஜ.க மாநில தலைவராக அண்ணாமலை ஒவ்வொரு துறைக்கும் அவருக்கான மாநில நிர்வாகிகள் அறிவித்து வருகிறார்.அந்த வகையில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில துணைத்தலைவராக ராஜேஷ்கண்ணா அவர்களை நியமித்துள்ளார்.இவர் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் (NFDC – Director)இயக்குனராக உள்ளார்.

ராஜேஷ் கண்ணாவை கட்சி பொறுப்புக்கு கொண்டுவருவதன் மூலம் திரைதுறையினரை பா.ஜ.க தன்பக்கம் இழுப்பதற்கு பலமாக அடித்தளம் அமைப்பதாக தெரிகிறது.இவர் NFDC மூலம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

