தமிழ்நாடு

விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விடுதலை கோரி ரவிச்சந்திரன், நளினி தொடர்ந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை போல சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.