இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..! ஒரேநாளில் 12,847 பேருக்கு தொற்று..
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 12,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 8822 பேருக்கும், நேற்று 12,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 7,985 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,82,697 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 63,063 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் ஒரேநாளில் 14 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5,24,817ஆக உயர்ந்துள்ளது.