Covid19இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 12,781 பேருக்கு கொரோனா – 18 பேர் உயிரிழப்பு…

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 13,216 பேருக்கும், நேற்று 12,899 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 09ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 8,537 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,27,07,900ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 76,700 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் ஒரேநாளில் 18 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5,24,873ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,80,136 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 1,96,18,66,707 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.