சினிமா

தமிழ் சினிமாவில் கால் பாதிக்கும் நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன்..!

தமிழ் சினிமாவில் இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் நடிகர் செந்தில் தவிர்க்க முடியாத அத்தியாயம். பல நூறு படங்களில் நடித்திருக்கும் செந்திலுக்கு இன்றுவரை பலர் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.

சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அவ்வப்போது படங்களில் நடித்துவருகிறார். அப்படி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் பாபி சிம்ஹாவுடன் புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார். இதில் அவரது மகனான மணிகண்ட பிரபுவும் அறிமுகமாகிறார்.

Senthil

அறிமுக இயக்குநர் என்.எஸ். ராகேஷ் இயக்கும் இப்படத்துக்கு தடை உடை என்று பெயரிடப்பட்டுள்ளது. பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில்தான் மணிகண்ட பிரபு அறிமுகமாகியிருக்கிறார். ரேஷ்மி சிம்ஹா தயாரிக்கும் இந்தப் படத்தில், மிஷா நரங், பிரபு, ரோகினி ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாபி சிம்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், செந்தில் மற்றும் அவரது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து லெஜெண்ட் நடிகர் செந்தில் சார் அவர்களை வரவேற்கிறோம். மணிகண்ட பிரபு தடை உடை படத்தில் இணைந்துள்ளார். உண்மையான அப்பாவும் மகனும் ரீல் அப்பா மற்றும் மகனாக நடிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவில் களமிறங்கும் செந்தில் மகன்

இதனையடுத்து மணிகண்ட பிரபுவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி செந்திலும், அவரது மகனும் இருக்கும் புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்தும்வருகின்றனர்.