மும்பை பங்கு சந்தை : சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் உயர்வு…
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகளுக்கும் கூடுதலாக உயர்வடைந்து அல்லது 1.2% அதிகரித்து 53,300 புள்ளிகளை கடந்து நிலை கொண்டுள்ளது.
பங்கு சந்தையில் நேற்று (ஞாயிறு) விடுமுறைக்கு பின்பு வாரத்தின் முதல் நாளான இன்று, டெக் மகிந்திரா அதிக லாபம் ஈட்டியுள்ளது. அது 3.47% வளர்ச்சி கண்டுள்ளது.
இதனை தொடர்ந்து எச்.சி.எல். டெக்னாலஜீஸ், இன்போசிஸ் மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ உள்ளிட்டவை லாபம் கண்டுள்ளன. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 190 புள்ளிகள் உயர்ந்து அல்லது 1.21% அதிகரித்து 15,900 புள்ளிகளை தொட்டுள்ளது.