அரசியல்தமிழ்நாடு

துரோகத்தின் அடையாளம் தான் ஓபிஎஸ்..! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்…

அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் செய்தியளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது :

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொது குழுவிற்கு அழைப்பிதழ் அனுப்புவது பற்றி ஆலோசித்தோம் . 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். பல முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

பண்ருட்டி ராமச்சந்திரன், புத்திச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 4 பேர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கூட்டத்திற்கு வர முடியாது என்று கடிதம் கொடுத்துள்ளார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்ட மாட்டார். . ஓ.பி ரவீந்திரநாத் ஸ்டாலினை சந்தித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு அரசு நடக்கிறது என்கிறார். இதை அதிமுக தொண்டன் ஏற்கமாட்டான்.

பொருளாளர் பதவியில் ஓபிஎஸ் நீடிப்பாரா, நீக்கப்படுவாரா என்பதை பொதுக்குழு முடிவு செய்யும் அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார்.துரோகத்தின் அடையாளம் தான் ஓ.பன்னீர்செல்வம் . துரோகம் அவர்களின் உடன்பிறந்த ஒன்று. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார் என்றார்.