இந்தியா

குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 80% நிலம் கிடைக்கப்பெற்றுவிட்டது – தூத்துக்குடியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி..

ராக்கெட் ஏவுதளம் அமைக்க சிறந்த இடமாக குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.

ராக்கெட் ஏவுதளம் அமைக்க 80% இடம் கிடைத்துவிட்டது. முழுமையான இடம் கிடைத்ததும் ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் பணி தொடங்கும்.

முதலில் அங்கு கட்டுமான பணிகள் செய்யக்கூடிய விஞ்ஞானிகள் சென்று மண் பரிசோதனை செய்து அசஸ்மெண்ட் எடுப்பார்கள். இந்த அசெஸ்மெண்டை மையப்படுத்தி பணிகள் தொடங்கும்.

குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம், சிறிய அளவு ராக்கெட் ஏவப்படும் தளம் அமைக்கும் திட்டம்.

இஸ்ரோவில் சிறிய ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

சிறிய அளவிலான ராக்கெட் விலைக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு சந்தை உள்ளது.