Covid19இந்தியா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது..! 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

இந்தியாவில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு 18ஆயிரத்தை கடந்தது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,819
பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 11,793 பேருக்கும், நேற்று 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .

இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 52ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது.