Covid19இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 16,135 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,135
பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 17,092 பேருக்கும், நேற்று 16,103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து18 ஆயிரத்து 564ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 13,958 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,28,79,477ஆக உயர்ந்துள்ளது.தற்போது வரை இந்தியாவில் 1,13,864 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 24 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5,25,223 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,78,383 பேருக்கு தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 1,97,98,21,197 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.