Covid19விளையாட்டு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் ரோகித் சர்மா …!

இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி உள்ளூர் அணியுடன் இணைந்து கடந்த 23-ம் தேதி பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடியது.

அப்போது, இந்திய அணியின் கேட்பன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்டில் ரோகித் சர்மா விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

India vs Australia: Rohit Sharma replaces Cheteshwar Pujara as vice-captain  for last 2 Tests - Sports News

இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட ரோகித் சர்மா தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ரோகித் சர்மா கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று குணமடைந்துள்ளார். கொரோனா பரிசோதனையின்போது ‘நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்ததையடுத்து இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.