வணிகம்

அதிரடியாக ஏற்றம் கண்ட தங்கம் விலை..! கலக்கத்தில் இல்லத்தரசிகள்..

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

தங்கம் விலை அவ்வப்போது எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் அண்மைக்காலமாக ஒரு நாள் தங்கம் விலை அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது.

ஒரு நாள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்தடுத்த நாட்களில் அதிகளவில் உயர்த்தப்படுகிறது. ஜூன் மாதம் இறுதியில் தொடர்ந்து சரிவை சந்தித்து சவரன் ரூ. 30 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகி வந்த நிலையில், இம்மாத ( ஜூலை) தொடக்கத்திலே தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து அடுத்த நாளே ( ஜூன் 2) தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது. இந்த விலையேற்றம் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கவிலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தநிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக 144 ரூபாய் உயர்ந்திருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,810க்கும், ஒரு சவரன் 38,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதெபோல் சென்னையில் வெள்ளி விலையும் உயர்ந்திருக்கிறது. அதன்படி சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.64-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.64,000-க்கும் விற்கப்படுகிறது.