இளைஞர்கள் கட்டாயம் ‘ராக்கெட்ரி’ படத்தைப் பார்க்க வேண்டும்..! மாதவனை மனதார பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் …
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் சிறந்த நடிகராக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகர் மாதவன் .
இந்நிலையில் அண்மையில் வெளியான ராக்கெட்ரி-நம்பி விளைவு படத்தின் மூலம் இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் மாதவன் . இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், வாழ்க்கையை கருவாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிம்ரன் மற்றும் ரவி ராகவேந்திரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் பதிப்பில் நடிகர் சூர்யாவும், இந்தி பதிப்பில் ஷாருக் கானும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த ஜூலை 1-ம் தேதி இந்தப் படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை படத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்த மாதவனுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ராக்கெட்ரி படத்தைப் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
“ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் – குறிப்பாக இளைஞர்கள்.
நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.