பாவப்பட்ட ஆண்களின் கவனத்திற்கு..! கண்மூடும் வயதில் மேக்கப் போட்டு 3 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பியூட்டி பாட்டி..
அந்த காலமாக இருந்தாலும் சரி இந்த காலமாக இருந்தாலும் சரி , பட்டிக்காடாக இருந்தாலும் சரி , பட்டினமாக இருந்தாலும் சரி . பொதுவாக மேக்கப் போடுவது என்றால் எந்த வயது பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, அப்படிப்பட்ட இந்த மேக்கப் தான் மூன்று ஆண்களின் வாழ்க்கையை துவம்சம் செய்துள்ளது .
கண்மூடும் வயதில் மேக்கப் போட்டு பியூட்டியாக மாறி ஆண்களை ஏமாற்றியது ஒரு வயதான பாட்டி என்பது தான் இந்த சம்பவத்தின் ஹைலைட் ஆன மேட்டர் .
சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் ஹரி என்பவர் கடந்த 2008 ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார், பின்னர் அவருக்கும் அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர். இதனை தொடர்ந்து ஹரியின் தாயார் ப்ரோக்கர் மூலமாக தனது மகனுக்கு இரண்டாவது கல்யாணத்திற்கு வரன் தேடி வந்துள்ளார்.
அப்போது தான் இந்த பியூட்டி பாட்டி என்ட்ரி கொடுத்துள்ளார் , ஆந்திர மாவட்டம் சித்தூரை சேர்ந்த இவர் தான் ஒரு அனாதை என்றும், தன் பெயர் சரண்யா, தனக்கு 35 வயது ஆகிறது என்று வாய்கூசாமல் பொய் சொல்லி அப்பாவி ஹரியை திருமணம் செய்துள்ளார்.
கல்யாணமான புதிதில் ஹரி அவரது ஆசை மனைவிக்கு 25 சவரன் நகைகளை பரிசாக கொடுத்துள்ளார், பின்னர் ஹரியின் சொத்து மதிப்புகள் குறித்து சரண்யா கேட்டறிந்துள்ளார். அந்த சொத்துக்களை தனது பெயரில் எழுதி வாங்க நினைத்தவர் அதற்கு தடையாக இருந்த மாமியாரை சாதி திட்டம் தீட்டி வீட்டை விட்டு விரட்டிவிட்டார். பின்னர் ஒருவழியாக ஹரியை ஏமாற்றி தனது பெயரில் சொத்துக்களை எழுதி வாங்க வழி செய்துவிட்டார்.
அந்த அப்பாவி ஹரியும் சொத்துக்களை சரண்யா பெயரில் எழுதி வைக்க ஒப்புதல் தெரிவித்து, சரண்யாவின் அடையாள அட்டைகளை தருமாறு கேட்டுள்ளார். அப்போது தனக்கு அடையாள அட்டை எதுவும் இல்லை என்று சரண்யா கூறியுள்ளார், பின்னர் அவரின் ஆதார் அட்டை கிடைத்துவிட அதில் சரண்யாவின் பெயர் சுகுணா என்று இருந்துள்ளது
இதுகுறித்து ஹரி கேட்டதற்கு அவர் தன்னை வீட்டில் சரண்யா என்று செல்லமாக அழைப்பார்கள் என்று கூறி சமாளித்து விட்டார் , பின்னர் அந்த அடையாள அட்டையில் இவரது வயதை கணக்கிட்டபோது 54 வயது என்பது தெரியவந்ததும் அப்பாவி ஹரிக்கு நெஞ்சுவலியை வந்துவிட்டது .
இந்த விஷயம் அறிந்து சந்தேகமடைந்த ஹரியின் தாயார் காவல் நிலையத்தில் சரண்யா மீது புகாரளித்துள்ளார். அப்போது தான் பியூட்டியாக மாறிய பாட்டியின் உண்மை முகம் வெட்டவெளிச்சத்திற்கு வந்தது.
இந்த பாட்டி ஹரியை திருமணம் செய்வதற்கு முன்னர் இரண்டு ஆண்களை இதே போல் ஏமாற்றி திருமணம் செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.